உங்கள் தலைமுடி கொட்டுகிறதா?

தண்ணீர் பற்றிய தகவல்களைத் தரும் இந்தத் தளத்தில் இப்படி ஒரு பதிவு உங்களுக்கு வியப்பை ஏற்படுத்தலாம்.

ஆனால், தலைமுடி கொட்டுவதற்கும் தண்ணீருக்கும் நிறைய தொடர்பு இருக்கிறது என்பதுதான் உண்மை.

நீங்கள் பயன்படுத்தும் நீரில் கால்சியம் கார்பனேட், மெக்னீசயம் கார்பனேட் போன்றவை இருந்தால் அந்த நீரை “கடின நீர்”  என்று அழைக்கலாம்.  ஆங்கிலத்தில் இதனை Hard Water என்பர்.

இது போன்ற கடின நீரை உங்கள் இல்லத்தில் நீங்கள் தொடர்ந்து பயன்படுத்தினால் என்ன ஆகும்?

  • உங்கள்  சருமத்தில் வறட்சி ஏற்படலாம். (Dry Skin)
  • உங்கள் தலைமுடியில் வறட்சி ஏற்பட்டு அதிகம் உதிரலாம்.
  • பாத்திரங்கள் தேய்க்க இந்த நீரைப் பயன்டுத்தினால் பாத்திரங்களில் வெள்ளை நிறப் புள்ளிகள் தோன்றலாம்.
  • தரைகள், சிங்க், போன்ற இடங்களிலும் இந்த “கடின நீர்” கறைகளை உண்டாக்கலாம்.
  • துணிகள் தோய்க்க அதிக அளவு சோப்பு அல்லது சோப்பு பவுடர் தேவைப்படும். ஏனென்றால் “கடின நீர்” நுரைக்குப் பதிலாக   Soap Scum என்பதைத் தோற்றுவித்து சோப்பின செயல்பாட்டைக் குறைக்கிறது.
  • கடின நீர் இருக்கும் வீடுகளில் உள்ள கெய்சர், காஃபி மேக்கர், வாசிங் மெசின் போன்றவற்றில் விரைவில் கோளாறுகள் வரலாம். அவற்றின் ஆயுட்காலம் குறையலாம்.
  • தண்ணீர் குழாய்களில் கால்சியம் படிந்து தண்ணீரின் ஓட்டம் தடைபடலாம். பிளம்பரை அடிக்கடி கூப்பிட வேண்டிவரலாம். சில நேரங்களில் பைப் லைனை மாற்ற வேண்டிய அவசியம் கூட வரலாம்.

இந்தக் காலத்தில் தண்ணீர் கிடைப்பதே கடினம்தான். அதனால் “கடின நீராக” இருந்தாலும் பயன்படுத்தித்தான் ஆக வேண்டும் என்பது உண்மைதான்.

ஆனால் “கடின நீரை” மென்மையாக்க நிறைய உபகரணங்கள் சந்தையில் வந்துவிட்டன. அவற்றைப் பயன்படுத்தி உங்கள் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முயற்சி செய்யலாமே!

உங்கள் இல்லங்கள், அபார்ட்மெண்ட்கள், அலுவலகம், தொழிற்சாலை போன்ற இடங்களில் ஹார்டு வாட்டர் இருந்தால் அதற்கு தீர்வுகாண எங்களை 9842706002  என்ற எண்ணில் அழைக்கலாம்.

 

 

 

குபீர் வருமானம் தரும் குடிநீர் தயாரிப்பு

அவள் விகடன் பத்திரிக்கையில் Packaged Drinking Water துறை பற்றிய ஒரு கட்டுரை கடந்த மே மாதம் வெளியிடப் பட்டிருந்தது.

அதனை உங்கள் பார்வைக்காக கீழே கொடுத்துள்ளோம். கீழே உள்ள இணைப்பை கிளிக் செய்தால் அந்தக் கட்டுரையை நீங்கள் படிக்கலாம்.

PACKAGED DRINKING WATER ARTICLE

நன்றி – அவள் விகடன்.

Team Emperor Aquaa Tech

An introduction to Packaged Drinking Water Plants

உங்கள் வீட்டிற்கு தினமும் 20 லிட்டர் LDPE ஜார்களில் வந்து இறங்கும் குடிநீர் எப்படித் தயாரிக்கப்படுகிறது என்பது உங்களுக்குத் தெரியுமா?

அதைத் தெரிந்து கொள்ள விருப்பமா?

உங்கள் பகுதியில் ஒரு Packaged Drinking Water Plant அமைத்து இந்த தொழிலில் ஈடுபடும் எண்ணம் உங்களுக்கு இருக்கிறதா?

இந்த பிரசன்டேசனைப் பார்வையிடுங்கள். மேலும் விவரங்களுக்கு http://www.eat-water.com என்ற இணையதளத்தைப் பார்வையிடுங்கள்.

நன்றி.

RO PLANTS FOR APARTMENTS

நீங்கள் அபார்ட்மெண்ட் எனப்படும் அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வசிக்கிறீர்களா?

இந்தச் செய்தி உங்களுக்குத்தான்.

உங்கள் ஒவ்வொருவரின் வீட்டிலும் தனித்தனியாக சிறிய அளவிலான R O System வைத்திருக்கிறீர்களா?

அப்படி வைத்திருப்பது பல வகையிலும் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கலாம்.

ஆனால்,,,,,,

அது போன்ற ஒவ்வொரு சிறிய RO System மூலம் உங்களுக்குக் கிடைக்கும் ஒவ்வொரு லிட்டர் குடிநீருக்கு எவ்வளவு லிட்டர் போர்வெல் தண்ணீர் வீணாகிறது என்று உங்களுக்குத் தெரியுமா?

உங்கள் நிலத்தடி நீர் ஆதாரத்தை இழக்காதீர்கள்.

அனைத்து வீடுகளுக்கும் ஒட்டுமொத்தமாக ஒரு RO System அமைத்துக் கொள்ளுங்கள். இதனால் ஆரம்பத்தில் ஒரு தொகை செலவு செய்யப்படுவது போலத் தோன்றினாலும், உங்கள் பகுதியில் உள்ள நீர்வளம் பாதுகாக்கப்படுவது உறுதி.

மேலும் தனித்தனி கருவிகளைக் கையாள்வதைக் காட்டிலும் ஒரு பொதுவான RO System பயன்படுத்தும் போது மின் சிக்கனம் ஏற்படுகிறது. காலப்போக்கில் செலவுகள் (ஒப்பிட்டுப் பார்க்கையில்) குறைவாகத்தான் இருக்கும்.

 

இது பற்றி மேலும் விவரம் அறிய அழையுங்கள் +91 98427 06002.

நன்றி.

Team Emperor Aquaa Tech

http://www.eat-water.com

admin@eat-water.com