உங்கள் தலைமுடி கொட்டுகிறதா?

தண்ணீர் பற்றிய தகவல்களைத் தரும் இந்தத் தளத்தில் இப்படி ஒரு பதிவு உங்களுக்கு வியப்பை ஏற்படுத்தலாம்.

ஆனால், தலைமுடி கொட்டுவதற்கும் தண்ணீருக்கும் நிறைய தொடர்பு இருக்கிறது என்பதுதான் உண்மை.

நீங்கள் பயன்படுத்தும் நீரில் கால்சியம் கார்பனேட், மெக்னீசயம் கார்பனேட் போன்றவை இருந்தால் அந்த நீரை “கடின நீர்”  என்று அழைக்கலாம்.  ஆங்கிலத்தில் இதனை Hard Water என்பர்.

இது போன்ற கடின நீரை உங்கள் இல்லத்தில் நீங்கள் தொடர்ந்து பயன்படுத்தினால் என்ன ஆகும்?

  • உங்கள்  சருமத்தில் வறட்சி ஏற்படலாம். (Dry Skin)
  • உங்கள் தலைமுடியில் வறட்சி ஏற்பட்டு அதிகம் உதிரலாம்.
  • பாத்திரங்கள் தேய்க்க இந்த நீரைப் பயன்டுத்தினால் பாத்திரங்களில் வெள்ளை நிறப் புள்ளிகள் தோன்றலாம்.
  • தரைகள், சிங்க், போன்ற இடங்களிலும் இந்த “கடின நீர்” கறைகளை உண்டாக்கலாம்.
  • துணிகள் தோய்க்க அதிக அளவு சோப்பு அல்லது சோப்பு பவுடர் தேவைப்படும். ஏனென்றால் “கடின நீர்” நுரைக்குப் பதிலாக   Soap Scum என்பதைத் தோற்றுவித்து சோப்பின செயல்பாட்டைக் குறைக்கிறது.
  • கடின நீர் இருக்கும் வீடுகளில் உள்ள கெய்சர், காஃபி மேக்கர், வாசிங் மெசின் போன்றவற்றில் விரைவில் கோளாறுகள் வரலாம். அவற்றின் ஆயுட்காலம் குறையலாம்.
  • தண்ணீர் குழாய்களில் கால்சியம் படிந்து தண்ணீரின் ஓட்டம் தடைபடலாம். பிளம்பரை அடிக்கடி கூப்பிட வேண்டிவரலாம். சில நேரங்களில் பைப் லைனை மாற்ற வேண்டிய அவசியம் கூட வரலாம்.

இந்தக் காலத்தில் தண்ணீர் கிடைப்பதே கடினம்தான். அதனால் “கடின நீராக” இருந்தாலும் பயன்படுத்தித்தான் ஆக வேண்டும் என்பது உண்மைதான்.

ஆனால் “கடின நீரை” மென்மையாக்க நிறைய உபகரணங்கள் சந்தையில் வந்துவிட்டன. அவற்றைப் பயன்படுத்தி உங்கள் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முயற்சி செய்யலாமே!

உங்கள் இல்லங்கள், அபார்ட்மெண்ட்கள், அலுவலகம், தொழிற்சாலை போன்ற இடங்களில் ஹார்டு வாட்டர் இருந்தால் அதற்கு தீர்வுகாண எங்களை 9842706002  என்ற எண்ணில் அழைக்கலாம்.

 

 

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s